Social Icons

Featured Posts

Saturday, 12 April 2014

கணனி பொது அறிவு வினா-விடைகள்

1) "Random Access Memory(RAM)"என்பதன் தமிழ் பதம் எது ?
1) சேமிப்பகம்
2) எழுந்தமானமாக செயலாற்றும் ஞாபகசக்தி
3) அடையாளக்குறி
4) வாசித்தலுக்கு மட்டுமேயான ஞாபகசக்தி

2) போலியான வன்பொருள், மென்பொருள்களை உருவாக்குவது, பயன்படுத்துவது எவ்வாறு அழைக்கப்படும் ?
1) Crime
2) Cracking
3) piracy
4) virus

3) Microsoft நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அட்டவணைச் செயலி?
1) Improve
2) Quattro Pro
3) Excel
4) VisiCalc

4) எது மாறிகள் (Variables) என்றழைக்கப்படுகின்றன?
1) சர நிலையுரு (String Literal)
2) வில்லைகள் (Tokens)
3) குறிப்பெயர்கள் (Identifiers)
4) சிறப்புச்சொற்கள் (Keywords)

5) Ms Word இல் எழுத்தை தடிமனாக்க விசைப்பலகையில் எதனை அழுத்த வேணும்?
1) Ctrl+S
2) Ctrl+B
3) Ctrl+U
4) Ctrl+I

6) AVI வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?
1) IBM
2) Apple
3) Microsoft
4) Macromedia

7) Multimedia Messaging System (MMS) என்பதன் தமிழ் பதம்?
1) ஊடாடும் பல்லூடகம்
2) பல்லூடக செய்தி வழங்கும் அமைப்பு
3) பல்லூடக குறுஞ்செய்தி வழங்கும் அமைப்பு
4) பல்லூடக அமைப்பு

8) பல்லூடக கோப்புக்களை உருவமைக்க உதவும் மென்பொருள்கள் எவை?
1) Photo Shop
2) Flash
3) Maya
4) Paint

9) தன்னைத்தானே நகலெடுத்துப் பெருக்கிக்கொள்ளும், கணிப்பொறியில் சேமித்து வைத்துள்ள தரவுகளுக்கும், கோப்புக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது எது?
1) piracy
2) cracking
3) virus
4) privacy

10) குறிப்பிட்ட வாடிக்கையாளர் சேவைக்காக தொலைபேசி அடிப்படையில் அமைந்த சேவை பகிர்வு எது?
1) Telephone
2) Call Center (அழைப்புதவி மையங்கள்)
3) Internet Banking
4) Email

Thursday, 10 April 2014

உடுமலை நாராயணகவி - விவர குறிப்புகள்

சிறு குறிப்பு: 

பெயர் -  உடுமலை நாராயணகவி
இயற்பெயர் - நாராயணசாமி
சிறப்புப் பெயர் - கவிராயர்
பிறந்த இடம் - உடுமலைப் பேட்டை
பிறந்த வருடம்  - 1899
மறைந்த வருடம்  - 23.5.1981


விவர குறிப்புகள்: 

விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார்.

இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர்.

நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர்.

நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர்.

பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்.  

புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.

.இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது.

இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பெருமைக்குரிய உடுமலை நாராயணகவி 23.5.1981 அன்று இயற்கை எய்தினார்.

Friday, 4 April 2014

நாமக்கல் கவிஞர் வாழ்க்கை குறிப்புகள்

சிறு குறிப்பு:

இயற்பெயர்: இராமலிங்கம் பிள்ளை

பிறப்பு: அக்டோபர் 19 1888

ஊர்: மோகனூர் -நாமக்கல் மாவட்டம்

பெற்றோர்: அம்மணிம்மாள், வெங்கடராமன்

மறைவு: ஆகஸ்ட் 24, 1972விவர குறிப்பு:


தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர்.

முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.

 தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர்.

1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.

அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர்.

சாஹித்ய அகாடமியில் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர்.

தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.

முத்தமிழிலும், ஓவியக்கலையிலும் வல்லவர், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.

    ’கத்தி யின்றி ரத்த மின்றி
    யுத்த மொன்று வருகுது
    சத்தி யத்தின் நித்தி யத்தை
    நம்பும் யாரும் சேருவீர்’

என்னும் பாடலை உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.

புகழ் பெற்ற மேற்கோள்கள்:

    'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
    தமிழன் என்றோர் இனமுன்று

    தனியே அதற்கோர் குணமுண்டு'

    'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
    'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்

    கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

படைப்புகளில் சில: 1.     மலைக்கள்ளன் (நாவல்)
 2.     காணாமல் போன கல்யாணப் பெண் (நாவல்)
 3.     பிரார்த்தனை (கவிதை)
 4.     நாமக்கல் கவிஞர் பாடல்கள்
 5.     திருக்குறளும் பரிமேலழகரும்
 6.     திருவள்ளுவர் திடுக்கிடுவார்
 7.     திருக்குறள் புது உரை
 8.     கம்பனும் வால்மீகியும்
 9.     கம்பன் கவிதை இன்பக் குவியல்
 10.     என்கதை (சுயசரிதம்)
 11.     அவனும் அவளும் (கவிதை)
 12.     சங்கொலி (கவிதை)
 13.     மாமன் மகள் (நாடகம்)
 14.     அரவணை சுந்தரம் (நாடகம்)


கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது.

மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷன் விருதளித்துப் போற்றியது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது.

இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடி கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது.

தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Thursday, 3 April 2014

உரிச்சொல் - தமிழ் இலக்கணம்

உரிச்சொல் என்பதை உரி + சொல் எனப் பிரித்துப் பார்க்க வேண்டும். உரி என்பது உரிய (உரிமை) என்ற பொருளைத் தருவதாகும். உரிச்சொல் எதற்கு உரியது என்றால் செய்யுளுக்கு உரியதாகும். உரிச்சொற்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கில் வராத சொற்களாகும்.

உரிச்சொல் என்பதை பெயருக்கும் வினைக்கும் உரியசொல் என்றும் கூறுவார்கள். உரிச்சொல் பெயருக்கும் வினைக்கும் அடையாக வருவதோடு அவற்றின் பண்பையும் விளக்கி நிற்பதால் (அவற்றிற்குரிய சொல்லாக இருப்பதால்) உரிச்சொல் .


உரிச்சொல்லின் பொது இலக்கணம்

உரிச்சொல்லின் பொது இலக்கணத்தை நன்னூலார்

பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகி
ஒரு குணம் பலகுணம் தழுவிப் பெயர் வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்

என்று (நூற்பா 442) குறிப்பிடுகின்றார்.

1. உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயர் ஆகும்.
2. ஒரு சொல் ஒரு பண்பை உணர்த்தலாம் அல்லது  ஒரு சொல் பல பண்புகளையும் உணர்த்தலாம்.
3. உரிச்சொல், பெயர்ச் சொற்களோடும் வினைச் சொற்களோடும் சேர்ந்து அவற்றின் பண்பை உணர்த்த வரும்.
4. உரிச்சொல் செய்யுளுக்கு உரிய சொல்லாக வரும்.

எடுத்துக்காட்டு:

நனி பேதை  

நனி எனும் உரிச்சொல் பேதை எனும் பெயர்ச்சொல்லோடு சேர்ந்து வந்தது.
நனி = மிகுதி,
பேதை = அறிவற்றவன்

சாலத் தின்றான்  

சால எனும் உரிச்சொல் தின்றான் எனும் வினைச்சொல்லோடு சேர்ந்து
வந்தது.

சால = மிகவும்

மல்லல் ஞாலம்    
 
மல்லல் எனும் உரிச்சொல் வளம் எனும் ஒரு பண்பை உணர்த்தும்

கடி மலர்    

கடி எனும் உரிச்சொல் முறையே மணம் மிக்க மலர்,

கடி நகர்  

நகர் காவல் மிக்க நகர் எனப் பல பண்புகளை உணர்த்துகிறது.

உரிச்சொல் உணர்த்தும் பண்புகள்


உரிச்சொல் உணர்த்தும் பண்புகள் இரண்டு ஆகும்.

அவை : 1.     குணப் பண்பு     2. தொழிற் பண்பு

உரிச்சொல் பல்வேறு பண்புகளை உணர்த்தும் என முன்பு பார்த்தோம்.
அவற்றுள் பொருளின் பண்புகளை உணர்த்துவது
குணப்பண்பு ஆகும்.

எடுத்துக்காட்டு:

மாதர் வாள் முகம்

இங்கு மாதர் எனும் உரிச்சொல் விருப்பம் எனும் குணத்தை
உணர்த்துகிறது.

(மாதர்= விரும்பத்தக்க, வாள் முகம் = ஒளிமிக்க முகம்)

இமிழ் கடல்

இங்கு இமிழ் எனும் உரிச்சொல் ஒலித்தல் எனும் தொழிற்பண்பை உணர்த்துகிறது.

Tuesday, 1 April 2014

இந்திய வரலாறு பொது அறிவு வினா - விடை (வி.ஏ.ஓ )

1. சீனா பயணியான யுவான்சுவாங் இந்தியாவிற்கு வந்ததற்கான முக்கிய காரணம் என்ன?

A) ஹர்ஷவர்த்தனரின் அரசவையில் சீனாவின் வெளிநாட்டு தூதுவராக இருக்க
B) புத்த மதத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதற்கும், அம்மதத்தினைப் பற்றிய நூல்களை சேகரிக்கவும்
C) இந்திய இராணுவ முறையினை அறிவதற்கு
D) அரசியல் தஞ்சம் காரணமாக


2. அஜந்தா குகைச்சுவர் ஓவியங்கள் உள்ள இடம்

A) ஹைதராபாத்
B) தன்பாத்
C) ஔரங்கபாத்
D) பெரோஸாபாத்

3. பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?

A) விஷ்ணுசர்மா 
B)விசாகதத்தர்
C) வாத்ஸாயனர்
D) பெரோஸாபாத்

4. சமுத்திரகுப்தனை, மாவீரன் நெப்போலியனுடன் ஒப்பிடுவதற்கு முக்கியக் காரணம் என்ன?

A)  அவரது இராணுவ படையெடுப்புகள்
B) ஏனைய அரசுகளுடன் மேற்கொண்ட உறவுகள்
C) அவரது இராதந்திரம்
D) அவரது மதக்கொள்கை

5. எந்த அரசு வம்சத்தால் சக சகாப்தம் (Saka Era) ஏற்படுத்தப்பட்டது?

A)  மௌரிய வம்சம்
B) சுங்க வம்சம்
C) குஷான வம்சம்
D) குப்த வம்சம்

6. "உலகத்தில் அதர்மம் பெருகி தர்மம் தடுமாறும் போது நான் அவதரிப்பேன்" இது யாருடைய கூற்று?

A)  கௌதம புத்தர்
B) கிருஷ்ண பரமாத்மா
C) இராமகிருஷ்ண பரமஹம்சர்
D) ஜைன மகாவீரர்

7. சாரநாத்தில் தர்ம சக்கரத்துடன் கூடிய தூண் யாரால் கட்டப்பட்டது?

A)  கனிஷ்கர்
B) அசோகர்
C) ஹர்ஷர்
D) அஷ்வகோஷர்

8. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுக்க மிக முக்கியமான காரணம் எது?

A)  இந்தியாவின் திரண்ட செல்வம்
B) இந்தியாவின் மீது படையெடுக்கும்படி அலெக்சாண்டருக்கு கொடுத்த அழைப்பு
C) மிகப்பெரிய பேரரசு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்தியாவை வென்று புகழ்பெற வேண்டும் என்றும் அலெக்சாண்டர் விருப்பம் கொண்டிருந்தார் 
D) வடமேற்கு இந்தியாவை பாரசீக பேரரசின் ஒரு பகுதியாகவே அலெக்சாண்டர் கருதினார். இதனைப் பாரசீகத்துடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்தார்.

9. ஸ்வேதம்பர்களும் திகம்பரர்களும் எதனுடன் தொடர்புடையவர்கள்?

A)  பகவதம்
B) ஜைன மதம்
C) சைவ மதம்
D) புத்த மதம்

10. போதிசத்துவர்கள் புத்த மதத்தின் எந்தப் பிரவைச் சேர்ந்தவர்கள்

A)  ஹீனயானம்
B) போதயானம்
C) மஹாயானம்
D) திவிசத்வம்

Saturday, 29 March 2014

இலக்கண குறிப்பறிதல் - உவமைத் தொகை


உவமைத் தொகை:

மலர்விழி என்ற சொல் உவமைத் தொகைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இதில் மலர்விழி என்பதன் முழுத்தொடர் மலரைப் போன்ற விழி என்பதே மலர்விழி என சுருங்கிற்று.

அதாவது மலரைப் போன்ற விழியை உடையவள் என்று குறிப்பிடலாம்.

இதில் "போன்ற" என்ற உவம உருபு மறைந்து வருவதால் இது உவமைத்தொகையாகிற்று.

மலர்விழி என்ற சொல்லில் மலர் என்பது உவமை. விழி என்பது உவமேயம்.

உவமைக்கும் உவமேயத்திற்கு இடையே போன்ற "போல", "போன்ற", "அன்ன" என்ற உவம உருபுகள் மறைந்து வருவது உவமைத்தொகையாகும்.

மேலும் உதாரணச் சொற்கள்:

தேன்மொழி - தேனைப் போன்ற மொழி உடையவள்...
மதிமுகம் - மதி போன்ற முகத்தைக் கொண்டவள்.
கனிவாய் - கனி போன்ற வாயை உடையவள்.

இதுபோன்ற வார்த்தைகள் உவமைத் தொகையைக் குறிக்கும்.

Saturday, 22 March 2014

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 - VAO தேர்வு அறிவிப்பு..! ஆன்லைனில் அப்ளை செய்ய கடைசி தேதி ஏப்ரல் 15..


 தமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப ஜூன் 14-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை http://tnpscexams.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

வரும் ஜூன் 14-ம் தேதி இதற்கான தேர்வு நடைபெறும் என்றும், தேர்வு எழுத விரும்புவோர் ஏப்ரல் 15-ம் தேதி வரை http://tnpscexams.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், வங்கி மற்றும் அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்க்கு ஏப்ரல் 17ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசுப் பணியில் 2,342 வி.ஏ.ஓ. காலியிடங்களை நிரப்ப ஜூன் 14-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

வி.ஏ.ஓ. என்று அழைக்கப்படும் கிராம நிர்வாக அதிகாரி பணியில் 2,342 காலியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்பட உள்ளன.

இந்த பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

அறிவிக்கப்பட்டுள்ள மொத்த காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூன் 14-ல் தேர்வு கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு தகுதி உடையவர்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத்தேர்வு தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் ஜூன் 14-ம் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது.

 இந்த தேர்வில், பொது அறிவு பகுதியில் 75 கேள்விகள், வி.ஏ.ஓ. நடைமுறைகள் தொடர்பாக 25 கேள்விகள், திறனாய்வு பற்றிய 20 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 80 வினாக்கள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். நேர்முகத்தேர்வு கிடையாது எழுத்துத்தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். நேர்முகத்தேர்வு ஏதும் கிடையாது.

தேர்வில் வெற்றிபெற்றாலே வி.ஏ.ஓ. வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்கும் முறை தொடர்பான விவரங்கள், தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். ஏப்ரல் 15 கடைசி நாள் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் (நள்ளிரவு 11.59 மணி வரை) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை ஏப்ரல் 17-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார். 

வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.